• Tue. Nov 3rd, 2026

24×7 Live News

Apdin News

பல்கேரியாவின் முதல் பெண் அதிபராக இலியானா யோடோவா தேர்வு

Byadmin

Nov 3, 2026


பல்கேரியாவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று இலியானா யோடோவா, நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்வாகியுள்ளார்.

பால்கெரியாவின் அதிபர் ரூமென் ராதேவ் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி விலகியதை அடுத்து இடைக்கால அதிபராக அப்போது துணை அதிபராக இருந்த இலியானா யோடோவா பொறுப்பேற்றார்.

வாக்குப்பதிவு

கடந்த 10 மாதங்களாக அவர் இடைக்கால அதிபராக செயல்பட்டார். இதையடுத்து அங்கு அதிபருக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 25 அன்று நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நேற்று முன் தினம் (நவம்பர் 1) இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடந்தது.

இதில் பதிவான வாக்குகள் நேற்று இரவுக்குள் முழுமையாக எண்ணப்பட்டன.

வெற்றி

முடிவுகளின்படி பால்கெரிய சோஷியலிஸ்ட் கட்சியை சேர்ந்த தற்போதைய இடைக்கால அதிபர் இலியானா யோடோவா வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் பால்கேரியாவின் முதல் பெண் அதிபர் ஆகும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

யோடோவா 57.6 சதவீத வாக்குகளையும், தாராளவாத மற்றும் மேற்கத்திய சார்பு எதிர்க்கட்சி வேட்பாளரான ஆண்ட்ரே கைரோவ் 39.5 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்ததாக மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தோல்வியை ஒப்புக்கொண்ட கைரோவ், முடிவுகளை உள்ளபடியே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

இடதுசாரியாக அறியப்படும் யோடோவா மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளை விமர்சிப்பவராக அறியப்படுகிறார். ரஷியாவுடனான போரில் பல்கேரியா உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதை எதிர்ப்பவர் ஆவார்.

By admin