• Tue. Nov 3rd, 2026

24×7 Live News

Apdin News

நேஹா ஃபாத்திமா: மலையாள பிக்பாஸில் இவரது செயல்பாடு பற்றி சமூக ஊடகங்களில் விவாதம் ஏன்?

Byadmin

Nov 3, 2026


நேஹா ஃபாத்திமா

படக்குறிப்பு, நேஹா ஃபாத்திமா

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர் ஒருவரின் பெற்றோர், தங்கள் மகளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் நிகழ்ச்சிக்கு நேரடியாக வந்தனர். அப்போட்டியாளர் சக போட்டியாளர் ஒருவரை விரும்புவதாக நிகழ்ச்சியில் கூறியதாலேயே அப்பெற்றோர் வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்தப் பெண் போட்டியாளர் ஒரு முஸ்லிம் ஆவார். அப்பெண் விரும்புவதாகக் கூறிய சக போட்டியாளர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். பெண் போட்டியாளரிடம் அவரது பெற்றோர் பேசியது, அதற்கு அவர் அளித்த பதில் போன்றவை தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதையொட்டி பெரும் விவாதங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன. என்ன நடந்தது?

பிக் பாஸ் மலையாள சீசன்-8 தற்போது நடைபெற்று வருகிறது. 50 நாட்களைக் கடந்துள்ள இந்த சீசனை மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் நேஹா ஃபாத்திமா என்பவர் ஒரு போட்டியாளராக உள்ளார். இவர், விமான நிலைய பணியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், சமூக ஊடக இன்ஃப்ளூயென்சராக கவனம் ஈர்த்துள்ளார். ஃபேஷன், வாழ்வியல் உள்ளிட்டவை குறித்து அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு பிரபலமானவர். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது சுமார் 3 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்த பிக் பாஸ் சீசனில் நிகழ்ச்சியின் நடுவே ‘வைல்ட் கார்ட்’ போட்டியாளராக பங்கேற்றவர் சந்தோஷ் ராஜ். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைவதற்காக இணைய பிரபலங்கள், பொதுமக்கள் சார்பில் சிலர் பங்கேற்ற ‘அக்னிபரீக்‌ஷா’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் வாயிலாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொலைக்காட்சி பிரபலமான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் விளையாட்டுகளில் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதாக விமர்சனம் உண்டு. இதுதொடர்பாக தொகுப்பாளர் மோகன்லாலும் அவ்வப்போது எச்சரிக்கை செய்து வந்துள்ளார். சந்தோஷ் ராஜ் தன்னை ‘தாஷி’ என்ற பெயரில் அழைப்பதையே விரும்புவதாக நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

இந்நிலையில், நேஹா மற்றும் சந்தோஷ் ராஜ் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்திருப்பதாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ளனர்.



By admin