• Wed. Jun 17th, 2026

24×7 Live News

Apdin News

பளு தூக்கினால் வயதானாலும் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

Byadmin

Jun 17, 2026


பளு தூக்குதல்

பட மூலாதாரம், Getty Images

அனைத்து உடற்பயிற்சிகளும் நாம் நீண்ட காலம் வாழ உதவுகின்றன, ஆனால் தசை வலிமைக்கான பயிற்சிகள் சிறப்பாக வாழ உதவுகின்றன. ஒருவர் எவ்வாறு வலிமை பெறலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

சில நாட்களுக்கு முன் நான் கடையில் வாங்கிய பொருட்களை வீட்டிற்குள் எடுத்துச் சென்றதை பார்த்திருந்தால், நான் கொஞ்சம் விசித்திரமாக நடந்துகொண்டதை கவனித்திருப்பீர்கள்.

இரண்டு கைகளிலும் தலா ஒரு இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டிலை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, நான் தோப்புகரணம் போன்ற ‘ஸ்குவாட்ஸ்’ உடற்பயிற்சியைச் செய்யத் தொடங்கினேன்.

எனது அன்றாட வாழ்வில் அதிக வலிமைப் பயிற்சிகளைச் சேர்த்துக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இதைச் செய்கிறேன்.

நான் ஏன் இதைச் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது. உடல் தகுதியைப் பேணுவதைப் பொறுத்தவரை, என் நண்பர்கள் வட்டாரத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் ‘கார்டியோ’ எனப்படும் இதயத் துடிப்பை அதிகரிக்கும் பயிற்சிகளிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

By admin