• Fri. Nov 13th, 2026

24×7 Live News

Apdin News

பள்ளிப்பட்டு அருகே குளத்தில் 20 அடி நீள மலைப்பாம்பு- பொதுமக்கள் அச்சம்

Byadmin

Nov 13, 2026


மலைப் பாம்பு சிக்காததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பள்ளிப்பட்டு அருகே உள்ள பொதட்டூர்பேட்டை அடுத்து புதூர் கிராமத்தில் குளம் உள்ளது. இந்த குளத்தில் சுமார் சுமார் 20 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று நீண்ட நேரம் அசைவின்றி கிடந்தது. கோழி ஒன்றை விழுங்கி விட்டு அந்த பாம்பு அங்கு இருந்ததாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் மலைப்பாம்பை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதி விட்டனர்.

மலைப்பாம்பு

பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் அந்த மலைப்பாம்பு அங்கிருந்து குளத்திற்குள் சென்று புதர்களுக்குள் புகுந்து மறைந்துவிட்டது.

தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். ஆனால் அவர்களால் மலைப்பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. குடியிருப்பு அருகே இந்த குளம் உள்ளது. மலைப் பாம்பு சிக்காததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் அச்சுறுத்தும் மலைப் பாம்பை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கடைய குளத்தில் கிடந்த ராட்சத மலைப் பாம்பின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

By admin