உடனடி நடவடிக்கை:
கல்வி அமைச்சர் பிரத்யுமன் வாஜா, இந்த விவகாரம் தீவிரமாக கையாளப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார். குஜராத்தில் மதுபானம் தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் அருந்துதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் தற்போது விசாரணையில் உள்ளார், மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
காணொளி செய்தி ஒன்றில் அமைச்சர் கூறுகையில், “கிர் சோம்நாத் மாவட்டம், உனா தாலுக்காவில் உள்ள கபத் என்ற இடத்தில், ஆசிரியர் மாணவனை மதுபானம் வாங்க அனுப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த விவகாரத்தை மிகுந்த தீவிரமாக கையாண்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டேன். அதனைத் தொடர்ந்து, மாவட்ட அலுவலர் தாமதமின்றி அவரைப் பணியிடை நீக்கம் செய்தார்” என்று கூறினார்.