• Sat. Jul 11th, 2026

24×7 Live News

Apdin News

‘பெற்றோருடன் சேர்ந்து பீடி சுற்றிய சிறுமிகள்’ கபடியில் சாதனைகளை குவிக்க தொடங்கியது எப்படி?

Byadmin

Jul 11, 2026


 கபடி பயிற்சி மேற்கொண்ட சிறுமிகள்.
படக்குறிப்பு, கபடி பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் சிறுமிகள்

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

காளத்தி மடம் என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் அடங்கிய அணி, கடந்த ஐந்து ஆண்டுகளாக மூத்த வீராங்கனைகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்து இருக்கிறது காளத்தி மடம் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் ஆண்கள் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வரும் நிலையில், பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

காளத்தி மடம் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர் அந்த கிராமத்து சிறுமிகளை கபடியில் சாதிக்க வைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் இலவசமாக தினமும் காலை, மாலை இரு வேளையும் அவர்களுக்கு கபடி பயிற்சி அளித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த சௌந்தர பாண்டி பயிற்சிக்கான மைதானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

தினமும் அதிகாலையில் ஆர்வத்துடன் வரும் சிறுமிகளுக்கு முதல் கட்டமாக உடற்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து கபடியில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து போட்டியில் சாதிப்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

பயிற்சியின் அடிப்படையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் ‘இளம் புயல்’ என்ற பெயரில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பல்வேறு வெளி மாவட்டங்களில் விளையாடி நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளனர். அத்துடன், மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு கோப்பைகளை வென்றுள்ளனர்.

By admin