• Sat. Jul 11th, 2026

24×7 Live News

Apdin News

கரூர் கூட்ட நெரிசல்: முதலமைச்சர் விஜய் தனக்கு இருந்த பொறுப்பை புறக்கணிக்கிறாரா?

Byadmin

Jul 10, 2026


முதலமைச்சர் விஜய், கரூர்

பட மூலாதாரம், TVK

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரின் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய ஒரு பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தபோது, ‘கரூர்’ மாவட்டம் இந்தியா முழுவதும் பேசுபொருளானது.

அந்தத் துயர நிகழ்வு நடந்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 10) மீண்டும் கரூர் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்த ஒன்பது மாதங்களில் முதல்முறையாக இன்று கரூர் சென்ற தவெக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், ஒரு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார்.

பின்னர், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளையும், ஒருவருக்கு பத்து லட்சம் ரூபாய் கருணைத் தொகையையும் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

இந்த மொத்த நிகழ்வுமே பல விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.

By admin