அமெரிக்கா- ஈரான் இடையிலான போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தரராக செயல்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
60 நாள் இடைக்கால போர் நிறுத்தம் ஒப்பந்தம்
பிரான்சில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டின்போது அமெரிக்கா- ஈரான் இடையிலான 60 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.
அதன்பின் சுவிட்சர்லாந்தில் டெக்னிக்கல் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் என்னவானது என்ற கேள்வி எழுந்தது. பின்னர் இரு தரப்பிலும் தாக்குதல் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் திடீரென ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற இரண்டு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் டிரம்ப் கடும் கோபம் அடைந்தார். ஈரான் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். அமெரிக்க படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அத்துடன் போர் நிறுத்தம் முடிவடைந்து விட்டதாக அறிவித்தது.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமூக வலைத்தளத்தில் ஒரு பதவியை வெளியிட்டுள்ளார். அதில் “ஈரான் கேட்டுக் கொண்டதால் மட்டுமே, அமைதிக்காக பேச்சுவார்த்தை தொடர அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. எனினும், சந்தேகத்திற்கு இடமின்றி, போர் நிறுத்தம் முடிவடைந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி நாட்டின் அங்காராவில் நேட்டோ மாநாடு நடைபெற்றது. அப்போது டிரம்ப் “வாரக்கணக்கில் நீடித்த முழு அளவிலான போரை முடிவுக்கு கொண்டுவந்த போதிலும், அவ்வப்போது நிகழ்ந்த குறைந்த தீவிரத்தன்மை கொண்ட மோதல்களால் ஏப்ரல் 8-ஆம் தேதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. ஈரான் அதிகாரிகள் அற்பமானவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றார்.