• Fri. Jul 10th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்க தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரானின் சாபஹார் துறைமுகம் – இந்தியாவுக்கு சிக்கலாகுமா?

Byadmin

Jul 10, 2026


அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதலில் சபஹார் துறைமுகத்தின் கட்டுப்பாட்டு கோபுரம் சேதமடைந்துள்ளது.

பட மூலாதாரம், @GhonchehAzad

படக்குறிப்பு, அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதலில் சாபஹார் துறைமுகத்தின் கட்டுப்பாட்டு கோபுரம் சேதமடைந்துள்ளது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

அமெரிக்காவின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களில் சாபஹார் துறைமுகத்தின் கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் சேதமடைந்ததை இரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

பிபிசி பாரசீக செய்தியாளர் கோஞ்சே ஹபிபிசாத், சபஹார் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஜூலை 8 மற்றும் 9ஆம் தேதி இரவு, இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைக்குச் சொந்தமான பார்ஸ் செய்தி நிறுவனம், சாபஹார் சுதந்திர மண்டல அமைப்பின் நிர்வாக இயக்குநர் முகமது சயீத் அர்பாபியை மேற்கோள் காட்டி, கடல்சார் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் கோபுரம் சேதமடைந்துள்ளது. மேலும், சாபஹார் சுதந்திர மண்டலத்தின் ஒரு கிடங்கும் இந்தத் தாக்குதலில் சேதமடைந்ததாக அவர் கூறினார்.

புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை நடந்த அமெரிக்க தாக்குதல்களில் இரானை சேர்ந்த 14 குடிமக்கள் கொல்லப்பட்டதாக இரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin