• Sun. Jul 26th, 2026

24×7 Live News

Apdin News

பழனி மற்றும் முருகனை சுற்றி நடந்த சர்ச்சைகள் என்ன? ஒரு தொகுப்பு

Byadmin

Jul 26, 2026


பழனி கோயில், முருகன், த.வெ.க அரசு, தி.மு.க

பட மூலாதாரம், HRCE

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

பழனியில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்ததாக கோயில் நிர்வாகம் அளித்த புகாரில் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வரும் நிலையில், ‘பழனி கோயில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்வதறகு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக’, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

நில விவகாரத்தில் பழனிக்கே த.வெ.க அரசு மொட்டை போட்டுவிட்டதாக, தி.மு.க விமர்சித்துள்ள நிலையில், ‘காலப்போக்கில் உண்மைகள் வெளிவரும்’ என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பழனி கோயிலை முன்வைத்து சர்ச்சைகள் எழுவது புதிதல்ல. பழனி கோயிலின் வரலாறு என்ன?

பழனியில் அமைந்துள்ள தண்டபாயுதபாணி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கு முக்கிய திருவிழாக்களாக கொண்டாடப்படுகின்றன.

By admin