• Sun. Jul 26th, 2026

24×7 Live News

Apdin News

முஸ்தன்சிரி இப்திலா: எகிப்தை 7 ஆண்டு வாட்டிய பஞ்சத்தில் என்ன நடந்தது? வரலாற்றுப் பார்வை

Byadmin

Jul 26, 2026


கலீஃபா அல்-முஸ்தன்சிர் பில்லாஹ், பத்ர் அல்-ஜமாலி, எகிப்து

பட மூலாதாரம், TrustPast

படக்குறிப்பு, எட்டாவது பாத்திமிட் கலீஃபா அல்-முஸ்தன்சிர் பில்லாஹ்வின் ஆட்சியின்போது ஏற்பட்ட பஞ்சத்தில், இறந்தவர்களின் உடல்கள் கூட விட்டுவைக்கப்படவில்லை.

    • எழுதியவர், வக்கார் முஸ்தபா
    • பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையின் சில பகுதிகள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

கெய்ரோவின் அந்தச் சதுக்கத்தில், ஓர் அமைச்சரின் கோவேறு கழுதையைத் திருடி, அதைக் கொன்று, அதன் சதையைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட குற்றச்சாட்டின் பேரில் முந்தைய நாள் மாலை தூக்கிலிடப்பட்ட மூன்று பேரின் எலும்புக்கூடுகள் மட்டுமே எஞ்சியிருந்தன.

11-ஆம் நூற்றாண்டில் எட்டாவது பாத்திமிட் (Fatimid) கலீஃபா அல்-முஸ்தன்சிர் பில்லாஹ்-வின் ஆட்சியின் போது எகிப்தை உலுக்கிய இந்தப் பஞ்சம், இறந்தவர்களின் எச்சங்களைக் கூட விட்டுவைக்கவில்லை.

ஏழு ஆண்டுகள் நீடித்த இந்த நெருக்கடி, அதே கலீஃபாவின் பெயரால் வரலாற்றில் ‘அல்-ஷித்தத் முஸ்தன்சிரியா’ அல்லது ‘முஸ்தன்சிரி இப்திலா’ (நெருக்கடி) என்று அழைக்கப்படுகிறது.

அல்-முஸ்தன்சிர் பில்லாஹ்-வின் உண்மையான பெயர் மாத் அபு-தமீம். கி.பி 1036-இல் தனது ஏழு வயதிலேயே இவர் கலீஃபாவாகப் பொறுப்பேற்றார். அக்காலகட்டத்தில் பாத்திமிட் பேரரசு எகிப்து, வட ஆப்பிரிக்கா, சிசிலி, சிரியாவின் சில பகுதிகள் மற்றும் ஹிஜாஸ் (மெக்கா மற்றும் மதீனாவை உள்ளடக்கிய அரேபிய தீபகற்பத்தின் வடமேற்குப் பகுதி) வரை விரிவடைந்திருந்தது.

By admin