• Wed. Oct 28th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தானுடனான இன்றைய போட்டி இலங்கைக்கு தீர்மானம் மிக்கது

Byadmin

Oct 28, 2026


பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் பாகிஸ்தானை இலங்கை இன்று (27) செவ்வாய்க்கிழமை எதிர்த்தாடவுள்ளது.

இப் போட்டி லாகூர் கடாபி விளையாட்டரங்கில் இன்றுபிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இத் தொடரில் பாகிஸ்தான் தனது முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டுள்ள நிலையில் இலங்கைக்கு இன்றைய போட்டி தீர்மானம் மிக்கதாக அமையவுள்ளது.

பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடுவதற்கான தகுதியைப் பெற இலங்கைக்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி தேவைப்படுகிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் இலங்கையின் இறுதி ஆட்டக் கனவு நிறைவேறும்.

இங்கிலாந்துக்கு எதிராக ராவல்பிண்டியில் கடந்த 22ஆம் திகதி ஈட்டிய முற்றிலும் எதிர்பாராத வெற்றியினால் மிகுந்த உற்சாகமும் நம்பிக்கையும் அடைந்துள்ள இலங்கை, இன்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற கடுமையாக முயற்சிக்கவுள்ளது.

இந்த மும்முனை தொடரின் ஆரம்பப் போட்டியில் மோசமான துடுப்பாட்டம் காரணமாக பாகிஸ்தானிடம் 37 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை, தனது இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான வெற்றி இலக்கான 429 ஓட்டங்களை ஒரு பந்து மீதம் இருக்க கடந்து 2 விக்கெட்களால் முற்றிலும் எதிர்பாராத வெற்றியை ஈட்டி போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப் போட்டியில் பவன் ரத்நாயக்க குவித்த அபார சதம், ஆரம்ப வீரர் அவிஷ்க குணவர்தன, தசுன் ஷானக்க, ஜனித் லியனகே ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன இலங்கைக்கு சாதனைமிகு வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.

இந்த வெற்றியினால் இலங்கை அணி இறுமாப்பு அடைந்து விடக்கூடாது.

ஏனேனில், பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இலகுவான காரியம் அல்ல. இதன் காரணமாக இன்றைய போட்டியில் இலங்கை அணி மிகச் சிறந்த வியூகங்களை அமைத்து    அவற்றை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வெற்றிபெற முயற்சிக்க வேண்டும்.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் பெரும்பாலும் ஒரு மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத் தொடரில் இதுவரை துடுப்பாட்டத்திலும் சரி பந்துவீச்சிலும் சரி பிரகாசிக்கத் தவறிய சஹான் ஆராச்சிகே நீக்கப்பட்டு லஹிரு உதார அல்லது கமில் மிஷார அணியில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றையபடி இங்கிலாந்துடனான போட்டியில் விளையாடிய ஏனைய வீரர்கள் அனைவரும் இடம்பெறுவர் என நம்பப்படுகிறது.

By admin