• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

பாகிஸ்தான்: ரூ.20 கோடி வங்கி கொள்ளை வழக்கில் ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு துப்பு துலங்கியது எப்படி?

Byadmin

Nov 8, 2026


வங்கி லாக்கர் (மாதிரிப் படம்)

படக்குறிப்பு, வங்கி லாக்கர் (மாதிரிப் படம்)

பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், காவல்துறையிடம் சிக்காமல் வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டனர். ஆனால், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையினர் அவர்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பேலா மாவட்டத்தின் கடந்த ஆண்டு நடைபெற்ற வங்கிக் கொள்ளை தொடர்பான சம்பவம் இது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, ஆயுதமேந்திய நபர்கள் வங்கியிலிருந்து 20 கோடியே 20 லட்சம் பாகிஸ்தான் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது சாதாரண கொள்ளைச் சம்பவம் அல்ல. காவல்துறையிடம் சிக்காமல் இருப்பதற்காகக் கொள்ளையர்கள் விரிவாகத் திட்டமிட்டிருந்தனர்.

பாதுகாப்புப் படையினரின் சீருடைகளை அணிந்துகொண்டு, சில பரிவர்த்தனைகளைச் சரிபார்க்க வந்திருப்பதாகக் கூறி அவர்கள் வங்கிக்குள் நுழைந்துள்ளனர்.



By admin