• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

குழந்தையின் நடத்தை மாற்றத்தில் பெற்றோர், ஆசிரியர் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் எவை?

Byadmin

Nov 8, 2026


குழந்தைகள், மன உளைச்சல், மனநலம், ஆரோக்கியம், உளவியலாளர்கள்

படக்குறிப்பு, குழந்தைகள் கோபப்படுவது, பொருட்களை வீசுவது மற்றும் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பது போன்றவை மன உளைச்சலின் அறிகுறிகளாக இருக்கலாம் என உளவியலாளர்கள் கூறுகின்றனர்

    • எழுதியவர், ராஜ்வீர் கெளர் கில்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள ஒரு பள்ளியில், ஆறு வயது சிறுமியை எட்டு வயது சிறுவன் ஒருவன் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம், குழந்தைகளின் நடத்தை குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பஞ்ச்குலா காவல் துணை ஆணையர் அதிதி சிங் கூறுகையில், “சிறார் நீதிச் சட்டத்தின்படி, நிபுணர்களைக் கொண்டு அந்த எட்டு வயது சிறுவனின் நடத்தை மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. அதன் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

குழந்தைகள் இயல்பாகவே குறும்புத்தனம் செய்வார்கள், கோபப்படுவதும் எரிச்சலடைவதும் அவர்களின் வளர்ச்சிப் பருவத்தின் ஒரு பகுதி என்று கூறப்படுவதை நாம் கேள்விப்படுகிறோம்.

ஆனால், குழந்தைகளின் நடத்தையில் எது இயல்பானது, எது கவலைக்குரியது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக, அவர்களின் நடத்தை எல்லைமீறிச் சென்று, ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்குத் தடையாக அமையும்போது, அதைக் கவனிக்க வேண்டியது முக்கியம்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டிய நடத்தை மாற்றங்கள் எவை? குழந்தைகளின் நேர்மறையான வளர்ச்சிக்கு உகந்த சூழலை எவ்வாறு உருவாக்குவது? என்பது குறித்து உளவியலாளர்களிடம் ஆலோசனை கேட்டோம்.



By admin