• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

யாழ்ப்பாணத்தில் இன்று ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீட்டு நிகழ்வு

Byadmin

Nov 8, 2026


யாழ்ப்பாணத்தில் இன்று (07.11.2026) ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையினால் வெளியிடப்படும் இந்நூலின் வெளியீட்டு நிகழ்வை முன்னிட்டு, தமிழ்த் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த சத்தியாக்கிரகப் போராட்டங்களையும், அவற்றின் பின்னணியையும் பதிவு செய்யும் வகையில் இந்நூல் வெளிவரவுள்ளது. அறப்போராட்டங்களும் உரிமை மறுப்புகளும் என்ற கருப்பொருளை முன்னிறுத்தும் இந்நூல், தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியாகவும் அமைகிறது.

இந்நிகழ்வு இன்று பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணம், யாழ். மத்திய கல்லூரிக்கு அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

The post யாழ்ப்பாணத்தில் இன்று ‘சத்தியாக்கிரக வரலாறு’ நூல் வெளியீட்டு நிகழ்வு appeared first on Vanakkam London.

By admin