• Sat. Nov 7th, 2026

24×7 Live News

Apdin News

ஐசக் வால்டெஸ்: அமெரிக்காவில் தீவிர மத நம்பிக்கையால் ரத்தம் செலுத்தும் சிகிச்சையை ஏற்க மறுத்த இளைஞர் என்ன ஆனார்?

Byadmin

Nov 7, 2026


ஐசக் வால்டெஸுக்கு வலிப்பு ஏற்பட்டது, மேலும் அவரது உடல்நிலை மிக விரைவாக மோசமடைந்தது.

படக்குறிப்பு, ஐசக் வால்டெஸுக்கு வலிப்பு ஏற்பட்டது, அவரது உடல்நிலை மிக விரைவாக மோசமடைந்தது.

    • எழுதியவர், அலீம் மக்பூல், மத விவகார ஆசிரியர் கேத்தரின் வையட்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 26 வயதான ஐசக் வால்டெஸ் தனது வீட்டிற்கு அருகிலுள்ள நூலகத்தில் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் குலுங்கியதுடன், தலை தரையில் மோதியது.

இதையடுத்து அவர் சுயநினைவை இழந்தார். பின்னர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவரது தலை பலமாகத் தரையில் மோதியதால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

ஆனால், ஐசக்கிற்குச் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

அவர் ‘யெகோவாவின் சாட்சிகள்’ (Jehovah’s Witness) என்ற கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர். மத நம்பிக்கை காரணமாக ரத்தம் செலுத்தும் எந்தவிதமான சிகிச்சையையும் ஏற்கமாட்டேன் என்பதைக் குறிக்கும் ‘ரத்தம் வேண்டாம்’ என்ற அட்டையை அவர் வைத்திருந்தார்.

இதன் காரணமாக, ஐசக்கின் மூளையில் தேங்கியிருந்த திரவத்தை வெளியேற்றுவதற்கான மருத்துவச் செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை.



By admin