• Sat. Nov 7th, 2026

24×7 Live News

Apdin News

19இன் கீழ் ஆடவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் | இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இலகுவான வெற்றிகள்

Byadmin

Nov 7, 2026


ஓமான் தேசத்தின் அல் அமீரத் விளையாட்டரங்குகளில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (06) இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தமது போட்டிகளில் இலகுவான வெற்றிகளை ஈட்டின.

 

இந்தியாவுக்கும் நெபாளத்துக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 10 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

இந்தியாவின் வெற்றியில் அர்ஜுன் ராஜ்புட், இஷான் சூத் ஆகியோரின் மிகச் சிறந்த பந்துவீச்சுகளும் அணித் தலைவர் லக்ஷயா ராய்சந்தானி, ஆரியவிர் சேவாக் ஆகியோர் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதங்களும் முக்கிய பங்காற்றின.

இந்தியாவின் முன்னாள் வீரர்களான ராகுல் ட்ராவிட், விரேந்தர் சேவாக் ஆகியோரின் புதல்வர்களான அன்வே ட்ராவிட், ஆரியவிர் சேவாக் ஆகியோர் இந்திய கனிஷ்ட அணியில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

எண்ணிக்கை சுருக்கம்

நேபாளம் 42.3 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 128 (டார்ஷ் சோனார் 43, ஆஷிஷ் லுஹார் 29, நிராஜ் குமார் யாதவ் 20, அர்ஜுன் ராஜ்புட் 8 – 3 விக்., இஷான் சூத் 18 – 3 விக்., யாஷ்வீர் கௌத் 25 – 2 விக்.)

இந்தியா – வெற்றி இலக்கு 129 ஓட்டங்கள் – 19.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 129 (ஆரியவிர் சேவாக் 70 ஆ.இ., லக்ஷயா ராய்சந்தானி 53 ஆ.இ.)

 

பாகிஸ்தான் 9 விக்கெட்களால் வெற்றி

கனிசமான மோத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய இளையோர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 224 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை மிக இலவாக கடந்த பாகிஸ்தான் இளையோர் அணி 9 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

பாகிஸ்தான ஆரம்ப வீரர் உஸ்மான் கான் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 120 பந்துகளில் 21 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 139 ஓட்டங்களைக் குவித்து தனது அணியின் வெற்றியை இலகுபடுத்தினார்.

முன்னதாக ஐக்கிய அரபு இராச்சியம் முதலில் துடுப்பெடுத்தாடியபோத பின்வரிசை வீரர் நூருல்லா அயோபி துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடி 3 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களைக் குவித்து அணியின் மொத்த எண்ணிக்கை 220 ஓட்டங்களைக் கடக்க உதவினார்.

 

 

எனினும் பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது உஸ்மான் கான், ஜஹங்கிர் பிலால் ஆகிய இருவரும் 153 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்து   வெற்றியை சுலபமாக்கினர்.

தொடர்ந்து உஸ்மான் கான், அப்துல் காதிர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் மேலும் 72 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

 

எண்ணிக்கை சுருக்கம்

நேபாளம் 50 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 224 (நூருல்லா அயோபி 70, யாயின் கிரான் ராய் 47, ஸெய்னுல்லா ரெஹ்மானி 28, மொஹம்மத் சய்யாம் 37 – 3 விக்., ஹஸ்னய்ன் அபாஸ் தார் 22 – 2 விக்., அலி ராஸா 38 – 2 விக்., ரிஸ்வானுல்லா 55 – 2 விக்.)

பாகிஸ்தான் 37.3 ஓவர்களில் 225 – 1 விக். (உஸ்மான் கான் 139 ஆ.இ., ஜஹாங்கிர் பிலால் 60, அப்துல் காதிர் 20 ஆ.இ.)

By admin