• Sun. Nov 8th, 2026

24×7 Live News

Apdin News

தீபாவளி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது? ஒரு பார்வை

Byadmin

Nov 8, 2026


'வட இந்தியாவில் சைவம், தமிழ்நாட்டில் அசைவம்' - இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(தீபாவளியை முன்னிட்டு 2021-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது)

இந்திய குடும்பங்களில் தீபாவளி என்பது பிரிக்க முடியாத ஒரு பண்டிகையாக மாறிவிட்டது. ‘தீபாவளியன்று தென்னிந்திய உணவு முறைகளுக்கும் வடஇந்திய உணவு முறைகளுக்கும் இடையே வித்தியாசங்கள் உள்ளன’ என்கின்றனர் ஆர்வலர்கள். அப்படியென்ன வித்தியாசம்?

தீபாவளி என்றாலே புத்தாடையும் பலகாரங்களும்தான் நினைவுக்கு வரும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்குப் பல்வேறு புராணகால உதாரணங்களும் கூறப்படுகின்றன. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் நரகாசுரனை, கிருஷ்ணன் வதம் செய்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

அதேநேரம், வட இந்தியாவை பொறுத்தவரையில் வனவாசத்தை முடித்துக் கொண்டு அயோத்தியில் ராமர் கால்வைத்த நாளன்று தீப விளக்குகளால் வீடுகளை அலங்கரித்துக் கொண்டாடியதை தீபாவளியாக கொண்டாடுவதாகவும் கூறப்படுகிறது.

தவிர, சமணர்களை பொறுத்தவரையில் மகாவீரர் மோட்சம் அடைந்த நாள் மற்றும் சீக்கியர்களின் குருவான குருநானக் பிறந்தநாள் ஆகியவற்றை தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர். இதுதவிர, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தீபாவளியை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.



By admin