• Sun. Jun 28th, 2026

24×7 Live News

Apdin News

‘பாக்யராஜ் பாரதிராஜா மறைவுத் துயரில் இருந்து மீளவில்லை’ – பால்ய நண்பர்கள், திரையுலகினர் கூறியது என்ன?

Byadmin

Jun 28, 2026


பாக்யராஜ்

பட மூலாதாரம், Shantanu Bhagyaraj

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

”ஸ்டூடியோவுக்குள் இருந்த சினிமாவை கிராமத்துக்குக் கொண்டு வந்தவர் பாரதிராஜா என்றால், எளிய மனிதர்களின் உணர்வுகளை திரைக்குள் கொண்டு வந்தவர் பாக்யராஜ். இவர்களிருவருடைய படங்களின் கலவையாகத்தான் என்னுடைய படங்கள் அமைந்திருந்தன. திரைப்படக் கல்லூரியில் நான் படித்திருந்தாலும் திரைக்கதையைக் கற்றுக்கொண்டது பாக்யராஜ் படங்களிலிருந்துதான்!”

இப்படிச் சொல்கிறார் பல வெற்றிப்படங்களின் இயக்குநரான ஆர்.வி.உதயகுமார்.

”குடும்பஸ்தன் படத்துக்கு திரைக்கதை எழுதும் முன்பாக பாக்யராஜின் பல படங்களைப் பலமுறை பார்த்தோம். 80களில் இருந்த கோவையின் சின்னச்சின்ன வீதிகளையும், அங்கு வாழும் சாதாரண மனிதர்களின் உணர்வுகளையும் ரசிக்கும்படி திரையில் பதிவு செய்தவர் பாக்யராஜ் மட்டுமே. அவருடைய படங்களில் காட்சி அமைப்புகள், அழகிய நீரோட்டமாக இருக்கும். திரைக்கதைக்கு என்றென்றும் அவர்தான் பல்கலைக்கழகம்!”

இப்படிச் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த திரைப்பட கதாசிரியரும் நடிகருமான பிரசன்னா பாலச்சந்தர்.

‘மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மாதந்தோறும் பணம் அனுப்பிய பாக்யராஜ்’

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவுக்கு அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கோவையிலும் அவருக்காக பல இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றன.

By admin