• Fri. Sep 18th, 2026

24×7 Live News

Apdin News

பாஜக அரசு யுபிஐ பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம் விதிக்கப் போவதாக அறிவித்தது ஏன்?

Byadmin

Sep 18, 2026


யுபிஐ, பணப்பரிவர்த்தனைகள், வணிகர் தள்ளுபடி விகிதம், வங்கிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெருநகரங்கள் முதல் கிராமப் புறங்கள் வரை இந்தியா முழுவதும் யுபிஐ பரிவர்த்தனைகள் பிரபலமாக உள்ளன.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நாட்டின் உடனடி பணப் பரிவர்த்தனை நெட்வொர்க் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வங்கிகள் மற்றும் பிற கட்டண சேவை வழங்குநர்களை அனுமதிக்கும் மசோதாவுக்கு மக்களவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.

வணிகர் தள்ளுபடி விகிதத்தை (MDR) வசூலிப்பதில் இருந்து வங்கிகள் மற்றும் கட்டண சேவை வழங்குநர்களைத் தடுத்த சட்ட விதியை நீக்குவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.

எம்.டி.ஆர் என்பது ஒரு வாடிக்கையாளர் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போதெல்லாம் வணிகர்கள் வங்கிகள் மற்றும் கட்டண சேவை வழங்குநர்களுக்குச் செலுத்தும் ஒரு சிறிய கட்டணம்.

ஃபின்டெக் (Fintech) நிறுவனங்கள் நீண்ட காலமாக எம்.டி.ஆரை கோரி வந்தன. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்து வருவதால், எந்தவொரு வணிகக் கட்டணமும் இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவது இனி பொருளாதார ரீதியாக நிலையானதாக இருக்காது என்று இந்த நிறுவனங்கள் வாதிட்டன.

அதே நேரத்தில், யுபிஐ முறையை நிதி ரீதியாகத் தற்சார்புடையதாக மாற்ற விரும்புவதாகவும், அதனாலேயே எம்.டி.ஆரை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய அரசு கூறுகிறது.

By admin