• Fri. May 8th, 2026

24×7 Live News

Apdin News

பாம்புகள் கால்களே இல்லாமல் அதிவேகமாக நகர்வது எப்படி? பரிணாம வளர்ச்சியின் அறிவியல் உண்மை

Byadmin

May 8, 2026


பாம்புகளுக்கு ஏன் கால்கள் இல்லை? கால்களே இல்லாமல் அவை அதிவேகமாக நகர்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

பாம்புகள் தரையில் சத்தமின்றி ஊர்ந்து செல்லும், வியக்கத்தக்க வேகத்தில் நகரும், சிரமம் ஏதுமின்றி மரங்களில் ஏறும், நீரில் நீந்தும் பாம்புகளைக் காணும்போது பலருக்கும் ஒரு பொதுவான கேள்வி எழுவதுண்டு. அது, கால்களே இல்லாத ஓர் உயிரினம் எப்படி இவ்வளவு திறமையாக நகர முடிகிறது?

பார்ப்பதற்கு மிகவும் எளிமையானவையாகத் தோன்றும் இந்த ஊர்வன உயிரினம், பூமியின் ஏறக்குறைய அனைத்து கண்டங்களிலும் தடையேதுமின்றி இயங்குவதற்கு உதவும் வகையில், பல்வேறு விதமான தகவமைப்புகளை பெற்றுள்ளது.

பெரும்பாலான நிலவாழ் உயிரினங்கள், உயிர் வாழ்வதற்கு, வேகம் மற்றும் சமநிலையுடன் இயங்குவதற்குக் கால்களையே சார்ந்துள்ளன. ஆனால், அப்படிப்பட்ட எந்த உறுப்புமே இல்லாத பாம்புகள், அதே வேகத்துடனும் சமநிலையுடனும் இயங்குவது எப்படி? அதன் உடலமைப்பின் அறிவியல் பின்னணி என்ன?

ஆரம்பக் காலத்தில் கால்களுடன் இருந்த பாம்புகள்

இயற்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பாம்புகள் ஆரம்பம் முதலே இவ்வாறு கால்களின்றி இருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

நேச்சர், சயின்டிஃபிக் அமெரிக்கன் உள்ளிட்ட ஆய்விதழ்களில் வெளியான ஆய்வுகளின்படி, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இன்றைய நவீனகால பாம்புகளின் மூதாதை உயிரினங்களுக்குக் கால்கள் இருந்தன.

By admin