பார்வையற்ற ‘சாம்போ’ வீராங்கனை உலகளவில் சாதித்தது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது
ருகாயத் பார்வை இழந்தபோது அவருக்கு சாம்போ விளையாட்டு புது வாழ்வு அளித்தது.
சாம்போ என்பது ஜூடோ மற்றும் மல்யுத்தத்தின் கூறுகளை உள்ளடக்கிய ஒரு தற்காப்பு விளையாட்டு.
கண் நரம்பைப் பாதிக்கும் கிளௌகோமா நோயால் ருகாயத் தனது பார்வைத்திறனை இழந்தார்.
இதனால், நைஜீரியாவில் அன்றாட வாழ்க்கையில் அவர் தனிமையாக உணர்ந்தார்.
விளையாட்டு அவருக்குப் புதிய நோக்கத்தை அளித்தது. பின்னர், 2026-ஆம் ஆண்டு சாம்போ விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினார்
ஏப்ரல் மாதம் ஆர்மேனியாவில் நடைபெற்ற சாம்போ உலக கோப்பையில் ருகாயத் தங்கப் பதக்கம் வென்றார்.
பார்வைத்திறன் குறைபாடுள்ள பெண்கள் போட்டியிட்டது இதுவே முதல் முறையாகும்.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற சாம்போ உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ருகாயத் சமீபத்தில் பங்கேற்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு