• Wed. Nov 11th, 2026

24×7 Live News

Apdin News

சி.டி ஸ்கேன் உதவியால் வெளிப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பூட்டின் ரகசியம் – எப்படி?

Byadmin

Nov 11, 2026


பூட்டு, சி.டி ஸ்கேன்

படக்குறிப்பு, வேல்ஸ் கடற்கரையில் 1583ஆம் ஆண்டைச் சேர்ந்த பித்தளைப் பூட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

    • எழுதியவர், மெலரி வில்லியம்ஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வேல்ஸ் கடற்கரைக்கு அப்பால் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பூட்டில் இருந்த நான்கு எழுத்துகள் கொண்ட ரகசியக் குறியீட்டை, நிபுணர்கள் நவீன ஸ்கேனிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம், கிட்டத்தட்ட 400 ஆண்டுகளாக நீடித்த மர்மத்துக்கு விடை கிடைத்துள்ளது.

உலோகங்களைக் கண்டறியும் கருவியைப் பயன்படுத்தித் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பீட்டர் ஹியூஸ் என்பவர், சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்தப் பித்தளைப் பூட்டை 1999ஆம் ஆண்டு போர்ட் டால்போட்டில் உள்ள மார்கம் பகுதிக்கு அருகேயுள்ள மணல் குன்றுகளில் கண்டெடுத்தார்.

ஸ்பெயினில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, 1583ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி வீசிய புயலில் மூழ்கிய ‘ஆன் பிரான்சிஸ்’ என்ற கப்பலின் சரக்குகளில் இந்தப் பூட்டும் ஒன்றாக இருந்தது.

கப்பலில் இருந்த பொருட்கள் பல நூற்றாண்டுகளாக மணலில் புதைந்து கிடந்தன. அருங்காட்சியக நிபுணர்கள் மைக்ரோ சிடி ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பூட்டின் உட்புறத்தை ஆய்வு செய்தனர். இதன் மூலம், அதைத் திறப்பதற்கான சரியான எழுத்துக் குறியீட்டைக் கண்டறிந்து மர்மத்தைத் தீர்த்தனர்.

மாஸ்டெக் பகுதியைச் சேர்ந்த 69 வயதான பீட்டர் ஹியூஸ், மோர்ஃபா கடற்கரையில் பல தசாப்தங்களாக மேற்கொண்ட தேடலின்போது கண்டெடுத்த நூற்றுக்கணக்கான பொருட்களில் இந்தப் பூட்டும் ஒன்று என்று தெரிவித்தார்.



By admin