• Fri. Oct 16th, 2026

24×7 Live News

Apdin News

பிக்குகளின் பாதயாத்திரை கொழும்பை அடைந்தது – Vanakkam London

Byadmin

Oct 16, 2026


சிறையில் உள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்காகவும், பௌத்த பிக்குகளின் மத உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் பிக்குகள் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரை இன்று (15) கொழும்பை வந்தடைந்துள்ளது.

இதன்படி, பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள பிக்குகள் தற்போது ஜனாதிபதி செயலகத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள  வாரியபொல சுமங்கல தேரரின் உருவச்சிலைக்கு முன்னால் கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாதயாத்திரையின் ஆறாவது நாள் (இறுதி நாள் ) இன்றாகும்.

இதேவேளை ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

By admin