• Thu. Jun 4th, 2026

24×7 Live News

Apdin News

பியூஃபோர்ட் கோட்டை: 900 ஆண்டுகள் பழமையான கோட்டை இஸ்ரேல் – ஹெஸ்பொலா மோதலில் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

Byadmin

Jun 4, 2026


தெற்கு லெபனானில் பாழடைந்த இடைக்கால மலை உச்சி கோட்டையான பியூஃபோர்ட் கோட்டையில், செடி கொடிகள் மண்டிய பீடபூமிக்கு குறுக்கே பார்க்கும் சீருடை அணிந்த மூன்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களைக் காட்டும் படம்.

இஸ்ரேல் ராணுவத்தால் வெளியிடப்பட்ட பாடிகேம் காட்சிகள், இஸ்ரேலிய கொடியை அந்த இடத்தில் ஏற்றுவதற்கு முன்பு, இடைக்கால மலை உச்சி கோட்டையின் இடிபாடுகளுக்கு இடையே படைகள் நகர்வதைக் காட்டுகின்றன. தெற்கு லெபனானில் உள்ள பியூஃபோர்ட் கோட்டையை மீண்டும் ஒருமுறை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை, இதைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் இதனை “ஒரு தீர்க்கமான கட்டம் மற்றும் நமது கொள்கையில் ஏற்பட்ட தீர்க்கமான மாற்றம்” என்று அழைத்தார்.

“நாங்கள் அச்சத்தின் தடையை உடைத்துவிட்டோம்,” என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். “நாங்கள் முன்முயற்சி எடுத்து வருகிறோம். சிரியா, காஸா, லெபனான் என அனைத்து முனைகளிலும் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.”

இஸ்ரேல் தரைப்படை வீரர்கள் லிதானி நதியின் தங்களின் அசல் எல்லைக் கோட்டிற்கு அப்பால் லெபனான் எல்லைக்குள் முன்னெப்போதையும் விட ஆழமாக நகர்ந்து வரும் வேளையில் இது நடந்துள்ளது.

இஸ்ரேலின் இந்த சமீபத்திய தீவிரத்தன்மையை பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை விமர்சித்துள்ளன, அதே நேரத்தில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெற்கு லெபனானின் பெரிய பகுதியை காலி செய்யுமாறு மேலும் பல குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. அந்நாட்டின் பிரதமர், இஸ்ரேல் “கூட்டுத் தண்டனை” வழங்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

By admin