• Thu. Jul 30th, 2026

24×7 Live News

Apdin News

பிரகாசம்: பஞ்சாப்பில் கொத்தடிமையாக இருந்து 23 ஆண்டுகளுக்கு பின் கோவை திரும்பிய நபர்

Byadmin

Jul 30, 2026


'2 வேளைதான் சாப்பாடு'- பஞ்சாப்பில் கொத்தடிமையாக இருந்து 23 ஆண்டுகளுக்கு பின்  கோவை திரும்பிய நபர்

23 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த தனது மகன் பிரகாசத்தை பஞ்சாப் மாநிலத்தில் சந்தித்த தாய் சுந்தரி, இன்று (ஜூலை 30) அவருடன் கோவைக்கு திரும்பினார்.

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பல ஆண்டுகளாக கொத்தடிமையாக வாழ்ந்த பிரகாசம், தாயுடன் மீண்டும் சொந்த வீட்டிற்கு வந்திருப்பது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கோவைக்கு திரும்புவதற்காக சுந்தரி மற்றும் அவருக்கு உதவிய பத்திரிகையாளர் முத்தையா ஆகியோர் முதலில் ரயில் பயணத்தைத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்து பஞ்சாபுக்கு சென்ற நீண்ட பயணத்தால் சுந்தரி மற்றும் முத்தையாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சில தனிநபர்கள் உதவி செய்து சண்டிகாரில் இருந்து சென்னைக்கு விமானத்திலும், அங்கிருந்து பேருந்து மூலம் கோவைக்கும் வர ஏற்பாடு செய்தனர்.

இன்று காலை சுந்தரி, முத்தையா மற்றும் பிரகாசம் கோவைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் நீலாம்பூரில் உள்ள தங்களது வீட்டிற்குச் சென்ற சுந்தரியையும் பிரகாசத்தையும் காண அண்டை வீட்டார் மற்றும் உறவினர்கள் பலர் திரண்டனர்.

By admin