• Thu. Jul 30th, 2026

24×7 Live News

Apdin News

சிட்டி ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறிய இத்தாலி வீரர்

Byadmin

Jul 30, 2026


சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி 6-3, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போலந்தின் கமிலை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள காலிறுதி சுற்றில் லாரன்சோ முசெட்டி, ஸ்பெயினின் ரபேல் ஜோடார் உடன் மோதுகிறார்.

By admin