சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தொடர்ந்து இணைந்து செயல்படும்,” என்று பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பென்னி வாங், பின்னர் இந்த அமைப்பு பல புதிய முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக கூறினார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், “நாங்கள் நடத்திய ஒவ்வொரு கூட்டத்திலும், முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும், உண்மையான விளைவுகளை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். உண்மையான தேர்வுகளை வழங்குவது எங்கள் கடமையும் பொறுப்புமாகும், குறிப்பாக எங்கள் பிராந்தியத்தில் (இந்தோ-பசிபிக்) மூலோபாய சூழ்நிலைகள் மோசமடைந்து வருவதால் இது அவசியமாகிறது.
இப்பிராந்தியம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் எங்கள் பிராந்தியத்திற்கு ஏற்படும் விளைவுகளையும், அது எங்கள் எரிசக்தி பாதுகாப்பிற்கு என்ன அர்த்தம் கொடுக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம்,” என்று அவர் கூறினார்.