10
சர்வதேச அளவிற்கு புகழ் பெற்ற இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக அதிரடியான எக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘ஃபௌஜி’ திரைப்படத்தின் பிரத்யேக காணொளி அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஃபௌஜி’ திரைப்படத்தில் பிரபாஸ், இமான்வி, அனுபம் கேர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். தேச விடுதலைக்காக போராடும் ஒற்றை வீரரை பற்றிய படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி வை. ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை டி சீரிஸ் ஃபிலிம்ஸ் வழங்குகிறது.
இத்திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் ரசிகர்களிடம் அதிகரித்து வரும் நிலையில்… இந்த திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதியையும், நடிகர் பிரபாஸ் இதில் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கான அறிமுக காணொளியையும் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதில் 1942 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக போர் தொடர்பான காட்சிகளின் பின்னணியில் இந்திய தேச விடுதலைக்காக ஒன் மேன் ஆமியாக போராடும் ‘ஃபௌஜி’ எனும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்திருப்பதால், இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு பன் மடங்கு உயர்ந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.
இந்த காணொளியில் பிரபாஸின் நட்சத்திர பிம்பம் எதிர்பார்ப்பை விட உச்சத்தில் கட்டமைக்கப்பட்டிருப்பதால்… அவருடைய ரசிகர்கள் கொண்டாடி, இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதன் காரணமாக இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் 34 மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.