• Sat. Oct 24th, 2026

24×7 Live News

Apdin News

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து இறங்குமுகம்: தீபாவளி வரை இந்த சரிவு தொடருமா? ஒரு பார்வை

Byadmin

Oct 24, 2026


தங்கம், வெள்ளி விலை இறங்குமுகம்: தீபாவளி வரை இந்த சரிவு தொடருமா?

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

உலகளாவிய பங்குச் சந்தைகளில் நிலவும் சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 117 டாலரை எட்டியுள்ள சூழலில், அக்டோபர் 23 அன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிவைச் சந்தித்தன.

இந்திய சந்தையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2 லட்சம் ரூபாய்க்கும் கீழே சரிந்தது.

சர்வதேச சந்தையில், ‘கோமெக்ஸ்’ (Comex) தளத்தில் தங்கத்தின் எதிர்கால ஒப்பந்த விலை ஒரு அவுன்ஸிற்கு சுமார் 4,030 டாலராகவும், வெள்ளி விலை ஒரு அவுன்ஸிற்கு சுமார் 54 டாலராகவும் இருந்தது.

இந்திய உள்நாட்டுச் சந்தையான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX), தங்கத்தின் எதிர்கால ஒப்பந்த விலை 10 கிராமுக்கு சுமார் 1,42,300 ரூபாயாகவும், வெள்ளி விலை கிலோவுக்கு சுமார் 1,96,000 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்பட்டன.

இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது வாரமாக சரிந்துள்ளது.



By admin