• Mon. Sep 14th, 2026

24×7 Live News

Apdin News

பிரிக்ஸ் தலைவர்களுக்கு சைவ விருந்தா? அசைவம் பற்றிய ராகுல் கருத்தும் சூடு பிடிக்கும் விவாதமும்

Byadmin

Sep 14, 2026


பிரிக்ஸ் மாநாடு, சைவ உணவு சர்ச்சை, ராகுல் காந்தி, காங்கிரஸ், பாஜக

பட மூலாதாரம், @narendramodi

படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பிரிக்ஸ் 2026 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற சிறப்பு விருந்துக்கான உணவுப் பட்டியல் சமூக ஊடகங்களில் தீவிர விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. “80% இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள்” என்று காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

உண்மையில், இந்த விவாதமானது டெல்லியில் உள்ள ‘பாரத் மண்டபத்தில்’ சனிக்கிழமை இரவு நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டு சிறப்பு விருந்தை மையமாகக் கொண்டது.

ஏ.என்.ஐ செய்தி நிறுவன தகவலின்படி, இந்த விருந்தில் பனீர் லபாப்தார் (Paneer Lababdar), கூச்சி மார்மிக் (Gucchi Marmik), கேரட்-பீன்ஸ் பொரியல், தக்காளி பருப்பு சாறு, சிறுதானிய புலாவ் மற்றும் பீட்ரூட் ரைத்தா போன்ற உணவுகள் பரிமாறப்பட்டன.

தொடக்க உணவுகள் முதல் இனிப்பு வகைகள் வரை அசைவ உணவுகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த உணவுப் பட்டியலை பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்துள்ளார்.

By admin