• Mon. Sep 14th, 2026

24×7 Live News

Apdin News

சீனாவின் சொந்த தேவைகளே இந்தியாவுடன் அதனை நெருங்கி வரச் செய்கிறதா? ஒரு பகுப்பாய்வு

Byadmin

Sep 14, 2026


புது டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது, சீனாவும் இந்தியாவும் தங்களது உறவுகளை நீண்டகால இலக்கை மனதில் கொண்டு முன்னேற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புது டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது, சீனாவும் இந்தியாவும் தங்களது உறவுகளை நீண்டகால இலக்கை மனதில் கொண்டு முன்னேற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின.

    • எழுதியவர், தீபக் மண்டல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்த மாதத் தொடக்கத்தில் கிர்கிஸ்தான் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்ற எஸ்சிஓ கூட்டத்தின் போது இந்திய பிரதமர் மோதியுடன் கைகுலுக்கும் முன்பே, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வரக்கூடும் என்ற ஊகங்கள் பரவத் தொடங்கின.

செப்டம்பர் 12 அன்று, பிரிக்ஸின் 18ஆவது கூட்டத்தில் பங்கேற்க ஜின்பிங் புதுடெல்லி வந்ததன் மூலம் அந்த ஊகங்கள் உண்மையாகின.

கடைசி ஏழு ஆண்டுகளில் அவர் இந்தியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

2020 ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படையினருக்கிடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இருநாட்டு உறவு மோசமடைந்தது. அதன் பிறகு 2025ல் நடைபெற்ற எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோதி சீனா சென்றபோது உறவில் மாற்றத்திற்கான அறிகுறிகள் தெரிந்தன.

கல்வான் மோதலுக்குப் பிறகு அதிகரித்த கசப்புக்குப் பின், ஷி ஜின்பிங் இந்தியா வர சம்மதிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

By admin