• Mon. Sep 14th, 2026

24×7 Live News

Apdin News

ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு 2” திரைப்பட டிரெய்லர் வெளியீடு!

Byadmin

Sep 14, 2026


ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்துள்ள “மீசைய முறுக்கு 2” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக இப் படம் உருவாகியுள்ளது.

இப் படத்தை சுந்தர் சி மற்றும் குஷ்பு ஆகியோர் இணைந்து தயாரிக்க, ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்துள்ளார்.

இசைக்கலைஞர்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப் படத்தில் ஹிப்ஹாப் ஆதி தந்தை – மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

சைத்ரா, கெட்டிகா சர்மா மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன், யூடியூபர் ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

The post ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு 2” திரைப்பட டிரெய்லர் வெளியீடு! appeared first on Vanakkam London.

By admin