• Mon. Sep 14th, 2026

24×7 Live News

Apdin News

‘ஊசி முனை அளவில் மீச்சிறு குண்டு’ – பிரிட்டனில் விஷக்குடை மூலம் கேஜிபி செய்த படுகொலை

Byadmin

Sep 13, 2026


 ஜார்ஜி மார்கோவ்

பட மூலாதாரம், Getty Images

1978ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி, லண்டனில் ஜார்ஜி மார்கோவ் குடை ஒன்றால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். கேஜிபியுடன் (KGB – சோவியத் ஒன்றியத்தின் முதன்மை தேசிய உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு) தொடர்புடைய அரசியல் நோக்கில் அவருக்கு விஷம் செலுத்திக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. நான்கு நாட்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்தார். அடுத்த ஆண்டு, மார்கோவின் மனைவியும் மூத்த சகோதரரும், கொலைச் சதித் திட்டம் குறித்து சில மாதங்களுக்கு முன்பே அடையாளம் தெரியாத ஒருவர் தங்களை எச்சரித்ததாக பிபிசியின் பனோரமா நிகழ்ச்சியில் தெரிவித்தனர்.

“அவரது தொடையில் யாரோ குத்தியது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவர் திரும்பிப் பார்த்தபோது, பின்னால் ஒருவர் நின்றிருந்தார். அந்த நபர் மன்னிப்புக் கேட்டுவிட்டு, ஒரு குடையைக் கீழே போட்டுவிட்டுச் சென்றார்.”

பல்கேரிய அரசுக்கு எதிரான கருத்துகளுக்காக அறியப்பட்ட எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஜார்ஜி மார்கோவைப் பற்றி அவரது மனைவி அன்னபெல் மார்கோவ் கூறிய வார்த்தைகள் இவை.

1978ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி, 49 வயதான மார்கோவ் மத்திய லண்டனில் உள்ள வாட்டர்லூ பாலத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, குடையால் குத்தப்பட்டதாகக் கூறினார். நான்கு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். முதலில் மருத்துவர்கள் அவரது மரணத்துக்கு ரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மையே காரணம் என்று கருதினர். ஆனால், பின்னர் விசாரணை அதிகாரிகள் இது அரசியல் நோக்கத்துடன் நடத்தப்பட்ட கொலை என்பதை உணர்ந்தனர். மிகவும் நுட்பமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட இந்தத் தாக்குதல், மற்றொரு நாடு கடத்தப்பட்ட பல்கேரியரையும் குறிவைத்திருந்தது.

மார்கோவின் மனைவியும் மூத்த சகோதரரும், மார்கோவ் கொல்லப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே அவருக்கு விஷம் கொடுத்து கொல்லத் திட்டமிடப்பட்டுள்ளதாக அடையாளம் தெரியாத ஒருவர் எச்சரித்ததாக 1979ஆம் ஆண்டு பிபிசியின் பனோரமா நிகழ்ச்சியில் தெரிவித்தனர்.

By admin