மகளிர் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய மகளிர் அணி.
10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளை சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், இவ்விறு அணிகள் இடையிலான இறுதிப் போட்டி இன்று நடந்தது.
இந்திய அணி பேட்டிங்:
பரபரப்பான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்கம் கொடுத்த ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாளி வெர்மா ஜோடி சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர்.
இந்த ஜோடி முறையே 59 மற்றும் 68 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கியவர்களில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14 ரன்களும் ரிச்சா கோஷ் 17 எடுத்து அவுட் ஆகினர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுத்தது.
இலங்கை மகளிர் அணி சார்பில் மித்தாலி அயோத்யா, சமாரி அட்டப்பட்டு மறஅறும் சமுடி பிரபோடா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை மகளிர் அணி பேட்டிங் ஆடி வருகிறது.