• Sat. Jun 20th, 2026

24×7 Live News

Apdin News

‘புகைப்படம் எடுக்க கெஞ்சினார்’: டிரம்ப் – மெலோனி நெருங்கிய நட்பில் விரிசல் விழுந்த பின்னணி

Byadmin

Jun 20, 2026


ஜி7 மாநாடு, டிரம்ப் - மெலோனி, ஐரோப்பா, அமெரிக்கா - இத்தாலி

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஜி7 உச்சிமாநாட்டில் தன்னுடன் புகைப்படம் எடுக்க மெலோனி ‘கெஞ்சினார்’ என்ற டிரம்பின் கூற்று ‘கற்பனையானது’ என இத்தாலியப் பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.

இத்தாலியத் தொலைக்காட்சி ஒன்றில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்துகளால் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அதிர்ச்சியடைந்துள்ளார். இந்தக் கருத்துகள் இரு தலைவர்களுக்கும் இடையே பகிரங்கமான மோதலை உருவாக்கியுள்ளன.

டிரம்பின் கருத்துகள் முற்றிலும் “கற்பனையானவை” என்று மெலோனி கூறியுள்ளார். அடுத்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி ரத்து செய்துள்ளார்.

இரானுடன் போரிட டிரம்ப் எடுத்த முடிவுக்குப் பிந்தைய மாதங்களில், இருவருக்கும் இடையிலான உறவு எந்த அளவுக்குச் சிதைந்துள்ளது என்பதை இந்த பகிரங்க மோதல் உணர்த்துகிறது.

டிரம்ப் கூறியது என்ன?

இந்த வாரம் கிழக்கு பிரான்சில் உள்ள எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் டிரம்ப் – மெலோனி இருவரும் நெருக்கமாக உரையாடுவதைக் காண முடிந்தது. அப்போது தங்கள் உறவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், “எந்தவிதமான மனக்கசப்பும் இல்லை” என்றும் மெலோனி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

By admin