2
நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரின் சடலம், இந்தியாவின் நாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலம் நாகப்பட்டினம் கடற்கரையோரப் பகுதியில் இன்று (19) கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த மீனவர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்றிருந்த நிலையில் பின்னர் காணாமல் போயிருந்தார்.
அவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இன்று அவரது சடலம் தமிழகத்தின் நாகப்பட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரிகள் உரிய விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பின்னர் சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.