• Sat. Jun 20th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா – இரான் ஒப்பந்தம் எழுப்பும் தவிர்க்க முடியாத முக்கியமான கேள்வி என்ன?

Byadmin

Jun 20, 2026


ஹோர்மூஸ், இரான் - அமெரிக்கா ஒப்பந்தம்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இரானிய பொதுமக்கள் பல மாதங்களாக தாக்குதல் நடத்தப்படும் என்கிற அச்சுறுத்தலின் கீழ் வாழ்ந்து வருகின்றனர் (கோப்புப் படம்).

    • எழுதியவர், ஜெரெமி போவன்
    • பதவி, சர்வதேச ஆசிரியர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி 28-ஆம் தேதி இரானைத் தாக்குவது என்று எடுக்கப்பட்ட தவறான முடிவின் அரசியல், ராணுவ மற்றும் பொருளாதார விளைவுகளைக் குறிப்பிடுகிறது.

இதனால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. இரான் மற்றும் லெபனானில் ஆயிரக்கணக்கான பேர், குறிப்பாக பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவும் ஓரளவுக்கு இஸ்ரேலும் ஒரு வியூக ரீதியான தோல்வியைச் சந்தித்துள்ளன. உலகின் வலுவான சக்தியான அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் வலுவான சக்தியான இஸ்ரேல் இணைந்து தன்னை முடக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்கிற நோக்கில் மேற்கொண்ட கூட்டு ராணுவ நடவடிக்கை என்கிற கொடுங்கனவை இரானில் உள்ள ஆட்சி எதிர்கொண்டது. இரான் அதிலிருந்து பிழைக்க மட்டும் செய்யவில்லை, மாறாக கூடுதல் வலிமை பெற்றுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணையை முடக்கி, அதனுடன் உலக பொருளாதாரத்தின் முக்கிய கூறுகள், உலக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தின் ஐந்தில் ஒரு பங்கு ஆகியவற்றை முடக்குவது என்கிற உத்தியை இரான் கடைபிடித்தது.

இந்த உத்தி டிரம்ப் பல சலுகைகளை வழங்க நிர்பந்தித்தது. இந்த நகர்வு இஸ்ரேல் அரசு மற்றும் அமெரிக்காவின் இரான் பார்வையாளர்களை ஆத்திரமூட்டியதோடு எச்சரிக்கை கொள்ளவும் செய்துள்ளது.

By admin