• Sun. Sep 6th, 2026

24×7 Live News

Apdin News

புதிய உலக வரைபடம்: ஐ.நா-வில் அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

Byadmin

Sep 6, 2026


மெர்கேட்டர் புரொஜெக்ஷன்
படக்குறிப்பு, மெர்கேட்டர் வரைபடம் (இடது), ஈக்வல் எர்த் ப்ரொஜெக்ஷன் வரைபடம் (வலது)

பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்துக்குப் பதிலாக ஆப்பிரிக்காவின் அளவை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் புதிய உலக வரைபடத்தைப் பயன்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வாக்களித்துள்ளது.

டோகோ முன்மொழிந்து, ஆப்பிரிக்க ஒன்றிய (AU) உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட “வரைபடத்தைச் சரிசெய்வோம்” (Correct the Map) தீர்மானத்துக்கு ஆதரவாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட 164 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்தது. 6 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தன.

ஐ.நா.வின் இந்த வாக்கெடுப்பு கட்டுப்படுத்தக்கூடியது அல்ல. ஆனால், உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் பயன்படுத்தும் வரைபடங்களில் மாற்றங்கள் ஏற்பட இது வழிவகுக்கும்.

16ஆம் நூற்றாண்டு முதல் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மெர்கேட்டர் வரைபடம், ஆப்பிரிக்காவையும் கிரீன்லாந்தையும் ஏறக்குறைய ஒரே அளவில் காட்டுவதால் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. உண்மையில், ஆப்பிரிக்கா கிரீன்லாந்தைவிட 14 மடங்கு பெரியது.

இதனால், பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள நாடுகளின் தேவைகளும், சாத்தியக்கூறுகளும் குறைத்து மதிப்பிடப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

By admin