மத்தியப் பிரதேசத்தில் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்றும் சுற்றுலாத் துறையின் கூடுதல் இயக்குநர் என்றும் பொய் கூறி திருப்தி சிங் ராஜ்புத் என்ற 30 வயது பெண் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வீடியோ வைரல்
சமீபத்தில் சிவப்பு நிறப் புடவைகளில் மூன்று பெண்கள் தோன்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் இருவர் திருப்தி சிங்.
அந்த வீடியோவில், “நாங்கள் மத்தியப் பிரதேச சட்டசபை வளாகத்தில் இருக்கிறோம். எங்கள் சேட்டைகளைப் பார்த்தால் நாங்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று யாருக்கும் தெரியாது” என்று கூறிச் சிரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
போபால் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த வீடியோ சட்டசபையில் எடுக்கப்படவில்லை என்றும், அது மானுடவியல் அருங்காட்சியக வளாகம் ஒன்றில் படமாக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.