• Sat. Jul 11th, 2026

24×7 Live News

Apdin News

பூமியை போல் உயிர் வாழத் தகுந்த கோளுக்கான தேடலில் விஞ்ஞானிகள் கண்டறிந்தது என்ன?

Byadmin

Jul 11, 2026


சூரியன் மற்றும் கோள்களின் புகைப்படம்

பட மூலாதாரம், Nasa ESA CSA/ STScI/ Joseph Olmsted

    • எழுதியவர், கிறிஸ்டோஃபர் வாட்சன் & அன்னலீஸ் மோர்டியர்
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 12 நிமிடங்கள்

உயிர்கள் வாழ உதவும் சாத்தியமுடைய, பூமியின் ‘இரட்டையர் கோள்களை’ தேடும் நீண்ட பயணம் குறித்து, புறக்கோள் ஆய்வாளர்களான கிறிஸ்டோஃபர் வாட்சன் மற்றும் அன்னலீஸ் மோர்டியர் விளக்குகிறார்கள்.

கடந்த 1995ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி இத்தாலியின் புளோரன்ஸில் நடைபெற்ற ஓர் அறிவியல் கூட்டத்தில், இரண்டு சுவிஸ் வானியலாளர்கள் நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள பிரபஞ்சம் பற்றிய நமது புரிதலை மாற்றியமைத்த ஓர் அறிவிப்பை வெளியிட்டனர்.

ஜெனீவா பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த மைக்கேல் மேயர், அவரது முனைவர் பட்ட மாணவர் டிடியர் குவெலோஸ் ஆகியோர், சூரியன் தவிர வேறொரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் ஒரு கோளைக் கண்டறிந்ததாக அறிவித்தனர்.

அவர்கள் கண்டறிந்த அந்த நட்சத்திரம், 51 பெகாசி. இது பெகாசஸ் விண்மீன் தொகுப்பில் சுமார் 50 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அதைச் சுற்றி வந்த கோள் 51 பெகாசி பி என்று பெயரிடப்பட்டது. இது கோள்கள் எப்படி இருக்கும் என்று பாடப் புத்தகங்களில் எழுதப்பட்ட நாம் நினைத்த எதைப் போலவும் இருக்கவில்லை.

இது வியாழனின் நிறையில் பாதியையேனும் கொண்ட ஒரு ராட்சத வாயுக் கோளமாக இருந்தது. இது தனது நட்சத்திரத்தை பூமியின் கால அளவில் நான்கு நாட்களுக்கு மேலான கால அவகாசத்தில் சுற்றி வந்தது. இந்தக் கோள் நட்சத்திரத்திற்கு மிக அருகில் இருந்தது (சூரியனிடம் இருந்து பூமி இருக்கும் தூரத்தில் 1/20 பங்கு, அதாவது சூரியனில் இருந்து புதனின் சுற்றுப்பாதை இருப்பதைவிட அருகே). எனவே, இந்தக் கோளின் வளிமண்டலம் கொதிகலனைப் போல் இருக்கும், அங்கு வெப்பநிலை 1,000° செல்சியஸை தாண்டும்.

By admin