• Mon. Sep 21st, 2026

24×7 Live News

Apdin News

‘பெண்கள் ஜிம் செல்ல இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை’ – கோவையில் முஸ்லிம் பெண்களுக்கென ஜிம்

Byadmin

Sep 21, 2026


கோவை, இஸ்லாமிய பெண்கள், ஜிம், உடல்நலம்

”ஒரு பையன் ஜிம்முக்குப் போவதாகக் கூறினால் உடனே அதற்கு கொடுக்கப்படும் ‘சம்மதம்’, ஒரு பெண் போவதாகச் சொன்னால் உடனே வருவதில்லை. பொதுவாக ஜிம் என்றாலே அது ஆண்களுக்கான ஃபிட்னஸ் பயிற்சி இடம் என்ற தவறான கருத்து, சமூகத்தில் இருக்கிறது. அது பெண்களுக்கும் உரித்தானது. அதேபோன்று இஸ்லாம் மதமும் இதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை” என்கிறார் 3 குழந்தைகளுக்குத் தாயான ராஷிதா.

”எனக்கு 3 பிரசவங்களுமே சிசேரியன். அதனால் அதிக எடை தூக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இங்கே எனக்கு நல்ல பயிற்சி கொடுத்தனர். வரும்போது 78 கிலோ இருந்தேன். இப்போது 13 கிலோ எடை குறைத்துள்ளேன்.

முதலில் நடைபயிற்சிக்கு போவதாக வீட்டில் கூறிவிட்டு ஜிம் வந்தேன். ஏதாவது சாதித்துவிட்டுதான் சொல்ல வேண்டுமென்ற உறுதி இருந்தது. இங்கே ஸ்கிப்பிங் போட்டியில் முதல் பரிசு பெற்ற பின்பு, ஜிம்முக்குப் போவதைச் சொன்னேன். வீட்டில் எல்லோருமே சந்தோஷப்பட்டனர்” என்கிறார் கோவையைச் சேர்ந்த ஹசீனா.

இவர்களைப் போலவே கோவை சாரமேடு பகுதியில் இஸ்லாமிய பெண்களுக்காக பிரத்யேகமாக இயக்கப்படும் உடற்பயிற்சிக் கூடத்தில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்கள், தினமும் பயிற்சி பெறுகின்றனர். இந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கு நேரில் சென்ற பிபிசி தமிழ், அங்கிருந்த பெண்களிடம் கலந்துரையாடியது.

இஸ்லாமியப் பெண்களின் உடல் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடனே இயங்கி வரும் இந்த உடற்பயிற்சிக் கூடம் துவக்கப்பட்டதன் பின்னணியும் அதை நடத்தி வரும் பெண்ணின் அனுபவமும் மிகவும் அலாதியானது.

By admin