• Sun. Aug 9th, 2026

24×7 Live News

Apdin News

பெனாசிர் பூட்டோ அரசு கலைக்கப்பட்டதில் பாகிஸ்தான் ராணுவத்தின் பங்கு என்ன? ஒரு வரலாற்றுப் பார்வை

Byadmin

Aug 9, 2026


பெனாசிர் பூட்டோ, பாகிஸ்தான், ராணுவம், குலாம் இஷாக் கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெனாசிர் பூட்டோ தனது முதல் பதவிக்காலத்தில் 19 மாதங்கள் மட்டுமே பாகிஸ்தான் பிரதமராகப் பணியாற்றினார்.

    • எழுதியவர், வக்கார் முஸ்தபா
    • பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

அது 1990 ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரம். பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் பெனாசிர் பூட்டோ, இஸ்லாமாபாத்தில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஜாவேத் ஜப்பார் அவருக்குப் பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். அதிபர் குலாம் இஷாக் கான் விரைவில் அரசாங்கத்தை கலைத்துவிடுவார் என்று பிரதமர் பூட்டோவிடம் ஜப்பார் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, டிசம்பர் 1988இல் பெனாசிர் பூட்டோ பிரதமரானார்.

‘பட், பிரைம் மினிஸ்டர்’ (Butt, Prime Minister) என்ற தனது சுயசரிதையில், ஜாவேத் ஜப்பார், இதுபோன்று ஆட்சிக் கலைப்பு குறித்த வதந்திகள் முன்னரும் பரவி வந்ததாக எழுதியுள்ளார்.

ஆனால் அன்று அவருக்கு ஒரு ராணுவ அதிகாரியிடம் இருந்து இது குறித்த தகவல் கிடைத்தது.

By admin