ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, தி.மு.க.வின் திட்டங்களைச் சிதைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் த.வெ.க. ஆட்சியில் இத்தகைய செய்தி வந்திருப்பதால், இதில் உள்நோக்கம் ஏதும் உள்ளதோ, சதிச் செயல்கள் ஏதும் உள்ளனவோ என்று கருத வேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட புத்தகங்கள், அதனை எழுதிய எழுத்தாளர்கள், அனுமதி பெற்ற பதிப்பகங்கள் ஆகியவற்றின் பின்னணி வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.
எனவே, வழக்கம் போல் தி.மு.க. தி.மு.க. என்று சொல்லாமல், சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை அவசியம் என்பதே தி.மு.கழகத்தின் நிலைப்பாடு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.