• Fri. Nov 6th, 2026

24×7 Live News

Apdin News

ராவணன் யார்? ராவணனின் பல முகங்கள் பற்றிய ஓர் ஆய்வில் தெரியவந்தது என்ன?

Byadmin

Nov 6, 2026


ராவணன், ராமாயண இதிகாசங்கள், ராமர், சீதை, ஆசியா

படக்குறிப்பு, ராவணனின் உருவச் சிலை, இலங்கை

ராமாயணம். இந்தக் கதை எத்தனை முறை, எத்தனை வடிவங்களில் இதுவரை சொல்லப்பட்டுள்ளது என்பதற்குக் கணக்கே கிடையாது.

பல்லாண்டுகளாகச் சொல்லப்படும் இந்தக் கதையை மதங்களைக் கடந்து இந்தியாவின் பெரும்பாலான மக்கள் நன்றாகவே அறிவார்கள். இதுவரை பல ‘ராமாயண’ திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும், வெள்ளித்திரையில் வெளியாகும் ஒவ்வொரு ராமாயண படைப்புக்கும் எதிர்பார்ப்பு உருவாகிறது.

இப்போது, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோரது நடிப்பில், பெரும் பொருட்செலவில் ‘ராமாயணா: பாகம் 1’ இன்று (நவம்பர் 5) வெளியாகிறது. இதுவரை வெளியான ‘ராமாயண’ திரைப்படங்களுக்கும் இந்தத் திரைப்படத்திற்கும் ஒரு வித்தியாசம் இருப்பதாகத் தெரிகிறது.

பெரும்பாலும் திரையில், சீதை கடத்தப்பட்டதற்குப் பிறகான நிகழ்வுகள் மூலம் ராவணனின் கதை காட்டப்படும். ஆனால், இதில் ராவணனின் தோற்றம் குறித்து சற்று விரிவாகவே சொல்லப்படும் என படத்தின் முன்னோட்டம் காட்டுகிறது.

பிரபலமான ‘வால்மீகி ராமாயணத்தை’ அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தியா மட்டுமல்லாது தாய்லாந்து, மலேசியா, லாவோஸ் எனப் பல நாடுகளில் ராமாயணம் வழக்கில் உள்ளது. ஆனால், அங்கு சொல்லப்படும் கதைகள் வால்மீகி ராமாயணத்தில் இருந்து சற்றே வித்தியாசமானவை. அவற்றில் பல, வழக்கமான ‘வில்லன் அல்லது அசுரன்’ பிம்பத்தில் இருந்து ராவணனை வேறுபடுத்திக் காட்டுகின்றன.



By admin