உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளமான பைனான்ஸ் (Binance) மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய இணையவழித் தாக்குதலையடுத்து, பாதிக்கப்பட்ட தங்களது பயனர்களின் நிதியை வெற்றிகரமாக மீட்டுள்ளதாக அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற இந்த இணையத் தாக்குதலின் போது பைனான்ஸ் தளம் சுமார் 6.3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இழப்பை எதிர்கொண்டிருந்த நிலையில், அதில் 95 சதவீதமான நிதி தற்போது மீட்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் பைனான்ஸ் நிறுவனம் உடனடியாக நிறுத்தியிருந்ததுடன், வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை மீளப் பெறும் சேவைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. இந்நிலையிலேயே, பயனர்கள் 3.64 பில்லியன் டொலர் பெறுமதியான தமது சொத்துகளை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாக பைனான்ஸ், தனது எக்ஸ் (X) தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு உறுதிப்படுத்தல்களுக்குப் பின்னர், நேற்று (01) முதல் படிப்படியாக நிதி மீளப்பெறும் வசதிகள் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக பயனர்களால் 4.649 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி மீளப் பெறப்பட்டுள்ள அதேவேளை, 1.01 பில்லியன் டொலர் தொகை மீண்டும் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் பைனான்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
The post பைனான்ஸ் நிறுவனம் மீதான சைபர் தாக்குதல்: இழந்த நிதியில் 95 சதவீதம் மீட்கப்பட்டதாக அறிவிப்பு appeared first on Vanakkam London.