• Mon. Nov 2nd, 2026

24×7 Live News

Apdin News

புதுக்கோட்டையில் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்

Byadmin

Nov 2, 2026


திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு வாகனத்தில் சென்ற முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்றடைந்தார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றார்.

அங்கு, பாரம்பரிய பயிர் வகைகள், நெல், முந்திரி மற்றும் தானிய வகைகளை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டு கேட்டறிந்தார்.

புதுக்கோட்டையில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ரூ.11.72 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.

மேலும், புதுக்கோட்டையில் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

By admin