• Sat. Nov 28th, 2026

24×7 Live News

Apdin News

பைபிளில் இல்லாத சாத்தானின் பிரபலமான உருவம் எப்படி உருவானது? பிற மதங்களில் இருந்து எடுக்கப்பட்டதா?

Byadmin

Nov 28, 2026


இன்று நம்மிடம் உள்ள பிசாசின் பிம்பம், பல நூற்றாண்டுகளாக உருவான ஒரு கட்டமைப்பின் விளைவாகும்.

படக்குறிப்பு, இன்று நம்மிடம் உள்ள பிசாசின் பிம்பம், பல நூற்றாண்டுகளாக உருவான ஒரு கட்டமைப்பின் விளைவாகும்.

    • எழுதியவர், எடிசன் வெய்கா
    • பதவி, பிபிசி நியூஸ் பிரேசில்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

“தீப்பிழம்புகளைப் போன்ற” கண்கள், “நெருப்பின் மின்னல்களைப் போன்ற” பார்வை, “மிகவும் கரகரப்பான” குரல்.

தனது தனிப்பட்ட நாட்குறிப்பில் மறைந்த போப் பிரான்சிஸ் சாத்தானை இவ்வாறு விவரித்துள்ளார். அந்த நாட்குறிப்பின் ஆங்கிலப் பதிப்பு, பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகத்தின் ஓர் அங்கமான இமேஜ் (Image) நிறுவனத்தால் நவம்பர் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.

தனது வாழ்நாளில் இந்த உருவத்தை மூன்று முறை பார்த்ததாக மறைந்த போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

நம்பிக்கைக் கோட்பாட்டுக்கான திருப்பீடத் துறையின் தலைவரான கார்டினல் விக்டர் பெர்னாண்டஸ் தொகுத்துள்ள ‘பிரைவேட் டைரி ஆஃப் போப் ஃபிரான்சிஸ்’ என்ற நூலில், 2025ஆம் ஆண்டு உயிரிழந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், மூன்று காட்சிகளை விவரிக்கிறார். அதில், ஒரு காருக்குள், திருப்பலியின்போது, வாட்டிகன் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது ஆகிய மூன்று சந்தர்ப்பங்களில் அந்த உருவத்தைப் பார்த்ததாக அவர் கூறுகிறார்.

மேலும், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் தூங்கச் செல்லத் தயாரானபோது, “நரகத்தின் வாயில்களைக் கண்டதாகவும்”, ஜெபமாலையை “ஓர் ஆயுதமாக” எடுத்துக்கொண்டதாகவும் அவர் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் விடுபட்டுள்ளது: சிவந்த தோல், கொம்புகள், வால் அல்லது திரிசூலம் எதுவும் இல்லை. பலருக்குச் சாத்தான் என்றால் நினைவுக்கு வரும் உருவம் இதுதான்.

By admin