• Sat. Nov 28th, 2026

24×7 Live News

Apdin News

வர்த்தமான் ஜெயின்: திருப்பதி கோயிலுக்கு ரூ.206 கோடி தங்கம், வைர நகைகள் அளித்த சென்னை தொழிலதிபர் யார், எதற்காக? முழு பின்னணி

Byadmin

Nov 28, 2026


திருப்பதி கோயிலுக்கு ரூ.206 கோடி தங்கம், வைர நகைகள் நன்கொடை - யார் இந்த சென்னை தொழிலதிபர்? பின்னணி

படக்குறிப்பு, வர்த்தமான் ஜெயின் – ராதிகா

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்னையைச் சேர்ந்த வர்த்தமான் ஜெயின் – ராதிகா தம்பதியினர் வியாழக்கிழமை (நவம்பர் 26) 206 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர ஆபரணங்களை வழங்கியுள்ளனர்.

“தேவஸ்தான வரலாற்றில் இத்தகைய பிரமாண்ட நன்கொடை வழங்கப்படுவது இதுவே முதல்முறை” என, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

யார் இந்த வர்த்தமான் ஜெயின்? 121 கிலோ தங்கம், வைர நகைகளை நன்கொடையாக அளித்த பின்னணி என்ன?

’33 வகைகளில் 46 ஆபரணங்கள்’

திருப்பதி கோயிலுக்கு ரூ.206 கோடி தங்கம், வைர நகைகள் நன்கொடை - யார் இந்த சென்னை தொழிலதிபர்? பின்னணி

ஆந்திர மாநிலம் திருப்பதியில் வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வரும் இந்தக் கோவிலுக்கு தனி நபர்களிடம் இருந்தும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் ஏராளமான நன்கொடைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 26) சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின் – ராதிகா தம்பதியினர் 121 கிலோ எடையிலான தங்கம், வைர ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

By admin