• Sat. Nov 28th, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் தீபம்: உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றி மு.க.ஸ்டாலின், திருமா உள்ளிட்ட தலைவர்கள் கூறியது என்ன?

Byadmin

Nov 28, 2026


திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியது என்ன?

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சனிக்கிழமையன்று (நவம்பர் 28) தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்துள்ள உச்ச நீதிமன்றம், மத்திய ரிசர்வ் காவல் படையின் பாதுகாப்புடன் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு குறித்த தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்து என்ன? பார்க்கலாம்.

மு.க.ஸ்டாலின் விமர்சனம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.

‘மலை முழுவதும் சிஆர்பிஎஃப் படையிடம் ஒப்படைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், டிஜிபி, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.” என்று கூறியுள்ளார்.

By admin